புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (22:16 IST)

மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த நபரை விரட்டிப் பிடித்த தாய் !

தன் மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த நபரை விரட்டிப் பிடித்து அடித்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். மக்களும் எப்போதும் பிஸியுடனும் சுற்றுலா செல்வோரும் ஆர்வமுடன் அங்கு அலைமோதிக் கொண்டிருப்பர்கள்.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியில், தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்,தன் வீட்டிலுள்ள தன்மகளின் படுக்கை அறையை ஒருவன் எட்டிப்பார்ப்பதைக் கண்டதும் ஆத்திரமடைந்தார்.

உடனே தாமதிக்காமல் அவனைப் பிடிக்க முற்பட்டார். ஆனால் அவன் அங்கிருந்து ஓடிவிட்டான். இருப்பினும் அவனைப் பிடிப்பதிலேயே குறியாக இருந்த பெண், ஓடிச் சென்று விரட்டி அவனைப் பிடித்து போலீஸில் அவனை ஒப்படைந்தார்.

இதுகுறித்து அப்பெண் கூறும்போது, என் குழந்தைகள்தான் என் உலகம், அவர்களை பாதுகாப்பது என் கடமை எனத் தெரிவித்துள்ளார்.