1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (19:04 IST)

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும்   உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார்பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 12 டெஸ்ட் போட்டிகள் மறும் 24 ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடியவுள்ளது.

எனவே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எனும் பெருமைக்குரிய ஸ்டேடியத்தின் திறப்பு விழா விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த கிரிக்கெட் மைதானம் சுமார் ரூ.700 கோடியில்; கட்டப்பட்டுவருகிறது. இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து விளையாட்டை ரசிக்கலாம எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிலுள்ள மெர்போர்ன் கிரிக்கெட்  மைதானம்தான் உலகில் மிகப்பெரிய மைதனமாக இருந்தது. அங்கு சுமார் 90000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள் உள்ளன.

மேலும், அகமதாபாத்தில் உருவாகிவரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்தான் ஆசிய லெவன் அணிகள் மோதும் காட்சி கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இங்கு, 70 கார்ப்பரேட் பாக்ஸ், 4 டிரெசிங் ரூம்கள், ஒரு கிளப், ஹைவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.