1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (19:48 IST)

மயில் போல ஆர்டர் செய்தவருக்கு வந்த தொழுநோய் கேக் ! வைரல் வீடியோ

ஜார்ஜியா நாட்டில் வசித்து வருபர் ரெனா டேவிட். இவர் தனது திருமண நாளுக்கு மயில் தோகை விரித்து கேக் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு கேக்கை கடையில் ஆர்டர் கொடுத்தார். 
அந்த கேக்கின் விலை ரூ,23 ஆயிரம். இன்று  திங்கட்கிழமை அன்று ரெனாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டுக்கு கேக் வந்தது. அதை ஆசையாய் திறந்து பார்த்த ரெனா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
 
அவர் ஆர்டர் செய்த மயில் போன்ற கேக்குக்கு பதிலாக, தொழுநோய் வந்த வான்கோழி தன் இறகுகளை இழந்தது  போன்ற  தோற்றத்தில் அந்த கேக் இருந்தது.
 
அதனால் கோபம் கொண்ட ரெனா தனது கேக்குக்கான பணத்தை திரும்ப தரவேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் கேக்கர் அதை தர மறுக்கவே ரெனா அந்தக் கேக்கை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதன்பின்னர் கேக்கர் பணத்தை திருபி கொடுத்ததாக தகவல் வெளியாகின்றன.