வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By VM
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (11:20 IST)

சுற்றுலாவிற்கு ஆணுறை எடுத்து வருமாறு மாணவிகளிடம் கூறிய ஆசிரியர்!

வெளிநாட்டு சுற்றுலாவிற்கு ஆணுறை எடுத்து வருமாறு 14 வயது மாணவிகளிடம் கூறிய இங்கிலாந்து  ஆசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
மேற்கு சசெக்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சாட்ஸ்மோ கத்தோலிக்க உயர்நிலை பள்ளியில் இத்தாலி சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
 
அப்போது அங்கு பணிபுரியும் டேவ் குத்பெர்ட்சன் (53) என்கிற அறிவியல் ஆசிரியர், சுற்றுலாவிற்கு வருகை தரும் 14 வயது மாணவிகளிடம் ஆணுறை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்களுடைய வீட்டில் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது