செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (15:20 IST)

மாணவர்களை நிர்வாணப்படுத்தி வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்கள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது ஒரு தனியார் பள்ளி. கடந்த வியாழக்கிழமை அன்று  தாமதாக பள்ளிக்கு வந்ததாக சில மாணவர்களை ராணி குமாரி மற்றும் அனில் குமார் ஆகிய இரு ஆசிரியர்களும் நிர்வாணப்படுத்தி மூன்று மணிநேரம் வெயிலில் நிற்க வைத்தததாக சமூக வலைதளத்தில் மாணவர்களின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவர்களை வெயிலில் நிர்வாணமாக நிற்க வைத்து தண்டித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை நல  ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.