செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (16:41 IST)

டீக் கடையில் சிலிண்டர் வெடித்து இருவர் பலி ! பரபரப்பு சம்பவம்

மதுரை அருகே உசிலம்பட்டியில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர்  வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள டீக்கடையில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் கருப்பையா மற்றும் 6 வயது மகள் ஹேமலதா உயிரிழந்தனர்.
 
மேலும், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உடலில் படுகாயம் அடைந்த 5 வயது மகள் பிரதீபாவை அருகில் உள்ளோர் மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
டீக்கடையை நடத்தி வந்த கருப்பையாவுக்கு அவரது மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனைகயின் காரணமாக இந்த விபத்தா .? இல்லை விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் உசிலம்பட்டி போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.