திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (19:26 IST)

சுப்பிரமணியன் சுவாமி யாரை சொல்கிறார்: பிரபாகரனையா? பொட்டு அம்மானையா?

ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் பொட்டு அம்மான் இத்தாலியில் இருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருக்கிறார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுமானி கூறினார். அப்போது சுப்பிரமணியன் சுவாமி கூறியது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்ற கேள்வி எழுந்தது.
 
2010-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரஞ்சீவி மாஸ்டர் பேட்டி ஒன்றில் உளவுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பத்திரமாக இருப்பதாக கூறியிருந்தார். 
 
ஈழ இறுதி போர் முடிந்தது முதல் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டு சொல்வது பொட்டு அம்மானைதான் என்று தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர்.