தண்ணீரை பீய்ச்சிய போலீஸ்! ஷாம்பூ போட்டு குளித்த போராட்டக்காரர்கள்!
இலங்கையில் தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட நிலையில் அதில் போராட்டக்காரர்கள் ஷாம்பூ போட்டு குளித்த சம்பவம் வைரலாகியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட பகுதிகளை திரும்ப அளிக்க கோரியும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தும் பல பகுதிகளில் இலங்கை தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் நல்லூர் பகுதியில் போராட்டக்காரர்களை இலங்கை ராணுவத்தின் சிறப்பு பிரிவினர் தடுப்பு அரண்கள் அமைத்து கட்டுப்படுத்தி வருகின்றனர், எனினும் போராட்டக்காரர்கள், ராணுவம் இடையே மோதல் நிலவி வருகிறது. அவ்வாறாக மோதல் அதிகரித்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ சிறப்பு குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் வடிவேலு காமெடியில் வருவதுபோக பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரில் ஷாம்பூ போட்டு குளித்து காமெடி செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit By Prasanth.K