புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (13:41 IST)

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் எகிறும் கொரோனா பாதிப்புகள்!

சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது பல லட்சம் மக்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் முழு முடக்கத்தால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்தன.
 
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பல நாடுகளில் கொரோனா குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களில் வெகுவாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இங்கு திடீரென நோய்த் தொற்று அதிகரிக்க எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த ஸ்டெல்த் ஒமைக்ரான் திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4,00,741 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.