ஒரு பிரதமரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?...இம்ரான் கானை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ட்விட்டர் பதிவு ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் கலில் ஜிப்ரானின் வரிகள் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த புகைபடத்தில் ”நான் தூங்கியபின் கொண்டாட்டமே வாழ்க்கை என்று கனவு கண்டேன். விழித்தபின் சேவை செய்வதே வாழ்க்கை என்று உணர்ந்தேன்.
ஆனால் சேவை செய்தபின் சேவையே கொண்டாட்டமான ஒன்று தான் என்று தெரிந்துகொண்டேன்” என்று எழுதி கீழே கலில் ஜிப்ரான் கூறியதாக குறிப்பிட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த பதிவை ட்விட்டரில் பகிர்ந்த பின், அந்த பதிவின் பின்னோட்டத்தில் ஒருவர் “இது கலில் ஜிப்ரானின் வரிகள் அல்ல என்றும், இது ரவீந்திரநாத் தாகூரின் வரிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பின்னோட்டத்தில் ”பாகிஸ்தான் பிரதமராக இருந்துகொண்டு, இப்படி யார் எழுதியது என்று தெரியாமலேயே சமூக வலைத்தலங்களில் பதிவிடலாமா?” என்று கிண்டல் செய்துள்ளார்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இம்ரான் கானின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டிருக்கிறவர். மேலும் அவரது ட்விட்டர் கணக்கை 9.1 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.