நீங்க எங்களுக்கு வேணாம் - பாகிஸ்தான் அணியை கலைக்க சொன்ன ரசிகர்கள் – ஷாக் ஆன பாகிஸ்தான்

Pakistan
Last Modified புதன், 19 ஜூன் 2019 (12:29 IST)
தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை கலைக்க வேண்டுமென்று பாகிஸ்தான் ரசிகர்களே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பாகிஸ்தான் – இந்தியா மோதும் கிரிக்கெட் ஆட்டங்கள் உலகம் முழுவதும் பரபரப்போடு உற்று நோக்கப்படும். முக்கியமாக உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் ஒருமுறை கூட தோற்கடித்ததில்லை என்பதால் இந்த முறையாவது பாகிஸ்தான் வெற்றிபெறுமா என்கிற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை ஆட்டத்தில் 337 ரன்கள் அடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் வெறும் 212 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான். இதற்கு பிறகு உள்ள சில ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் கூட இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் அணி மீது தீராத கோபத்தில் உள்ளனர். எனவே ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அணியையும், அதை தேர்வு செய்த தேர்வு குழுவையும் கலைக்க வேண்டுமெனவும், புதிய தேர்வு குழுவை உருவாக்கி அதன் மூலம் வலிமையான அணியை உருவாக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விரிவான பதில் அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்குழு கூட உள்ளது. அதில தேர்வு குழுவினர் மற்றும் அணியில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :