திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (07:35 IST)

ஒருவழியாக அப்டேட்டை அறிவித்த அர்ச்சனா கல்பாதி: விஜய் ரசிகர்கள் குஷி

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'விஜய் 63' படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாதியிடம் இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் வெறுத்து போய்விட்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகியும் தயாரிப்பாளர் என்ற முறையில் அவரிடம் இருந்து எந்தவிதமான அப்டேட்டும் வராததால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகினர். நேற்று கொந்தளித்து எழுந்த விஜய் ரசிகர்கள் அர்ச்சனாவை அப்டேட் தரமுடியுமா? முடியாதா? என செல்லமாக மிரட்ட தொடங்கிவிட்டனர்
 
இந்த நிலையில் ரசிகர்களின் அன்புக்கட்டளைக்கு பணிந்த அர்ச்சனா கல்பாதி, 'தளபதி 63' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பால் குஷியான விஜய் ரசிகர்கள் தற்போது அர்ச்சனாவை தலையில் தூக்கி வைத்து ஆடி வருகின்றனர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அனேகமாக இன்றைய அப்டேட்டில் தளபதி 63' டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
வில்லு படத்திற்கு பின் விஜய் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வெளிவரவுள்ளது.