வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (08:13 IST)

ஐபேடை அடகு வைத்ததால் வந்த விபரீதம்; இந்திய வம்சாவளி போலீஸுக்கு தண்டனை!

சிங்கப்பூரில் ஐபேடை அடகு வைத்த இந்திய வம்சாவளி பெண் போலீஸுக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை வம்சாவளியாக கொண்ட ஹேமாவதி குணசேகரன் என்ற பெண் சிங்கப்பூர் போலீஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு ஐபேடுகளை இவர் ஒரு அடகு கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.

ஆனால் நீண்டகாலம் ஆகியும் அடமானம் வைத்த ஐபேடை அவர் மீட்டு கொள்ளாததால் அந்த அடகு கடை உரிமையாளர் அதை வேறு ஒருவருக்கு விற்றிருக்கிறார். இந்த சம்பவம் வெளியே தெரிய வர உடனடியாக ஜேமாவதி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேமாவதிக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஐபேடை அடகு வைத்த குற்றத்திற்காக இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 மாத காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.