செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (17:20 IST)

நாய் மீது பைக் ஏற்றிய காவல் உதவி ஆய்வாளர் ...சிசிடிவி வெளியீடு

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சக்திவேல்.  இவர், கடந்த வாரம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தற்காலிக சோதனைச் சாவடியில் பணி முடிந்து, நள்ளிரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் சாலையில் 10க்க்கும் மேற்பட்ட நாய்கள் படுத்திருந்தது. இதனைக் கவனிக்காத சக்திவேல் ஒரு நாயின் மீது தனது இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளார்.

வந்த வேகத்தில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த  காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை மருத்துவமனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவர் வாகனத்தில் சென்று, நாயின் மீது வாகனத்தை ஏற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், முக்கியமாக தலைக்கவசம் வைத்துள்ள அதை அணியாததே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.