விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு பயணம்....
சிங்கப்பூர் அரசு விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்லக்கூடிய பாஸ்போர்ட் கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரத்தை ஆய்வு செய்ய சர்வதேச ஆய்வு நிறுவனமான ஆர்டான் கேபிடல் முடிவெடுத்தது. தற்போது இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
முடிவுகளை தரவரிசையின் மூலம் வெளியிட்டுள்ளது. அதில், விசா இல்லாமலே பயணம் செய்ய அனுமதி வழங்கும் முதல் 10 நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், முதல் இடத்தில் சிங்கப்பூர் 159 புள்ளிகளை கொண்டு உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு விசா இல்லாமலே 159 வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமாம்.
இரண்டாவது இடத்தில் ஜெர்மனி உள்ளது. அமெரிக்கா 6 வது இடத்திலும், இந்தியா 75 வது இடத்திலும் உள்ளது.