செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (11:01 IST)

கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பியர்… எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு!

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீரில் இருந்து புது வகையிலான பீர் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

கழிவு நீரில் இருந்து மறு சுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து இந்தப் பீர் தயரிக்கப்படுகின்றது. முதலில், இந்த கழிவு நீர் சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு  நிலையத்திற்கு பம்ப் செய்யப்பட்டு, அதன் பிறகு, வடிகட்டப்பட்ட சுத்தமான நீராக மாறும். அதன் பின் பீர் தயாரிப்பு பொதுவாக அதிகளவு தண்ணீர் வேதைப்படுகிற்து இதன் மூலமாக சுமார்  40% தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என் அந்த நாட்டில் தண்ணீர் வாரியம் தெரிவித்துள்ளது.  

இந்த புதியவகை பியருக்கு தற்போது மதுபிரியர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் வரவேற்புக் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது.