1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (13:32 IST)

ரூ.2 கோடி கருப்பு பணத்தை கொள்ளையடித்த தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு

money
தொழிலதிபர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 2 கோடி கருப்புப் பணத்தை கட்டிட தொழிலாளர்கள் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் ரூபாய் 2 கோடி மூட்டைகளாக வைத்திருந்தார் 
இதுகுறித்து தகவல் அறிந்த கட்டிட தொழிலாளர்கள் அந்த பண மூட்டையை கொள்ளையடித்து கார் பைக் வீடு என வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்ததாக தெரிகிறது 
 
கட்டிட தொழிலாளர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தபோது திருப்பூர் தொழில் அதிபர் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்