1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:41 IST)

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் வானியல் அதிசயம்! – நெருங்கி வரும் கோள்கள்!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் பூமிக்கு மிக நெருக்கத்தில் வர உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் வானில் நிகழும் அதிசயங்கள் ஏராளமானவை. அவற்றில் சில மக்களிடையே மிகவும் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விண்கல் பயணம் ஆகியவற்றை தொடர்ந்து மற்றுமொரு வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.

சூரிய மண்டலத்தில் பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை சுற்றுவட்ட பாதையில் பூமிக்கு அருகே தாண்டி செல்ல உள்ளன, இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் 397 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு இரு கோள்களும் கடந்து செல்கையில் பெரிய நட்சத்திரங்களின் அளவிற்கு ஒளி வீசும் என்றும் கூறப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.