புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:35 IST)

6 ஆண்டுகள் விண்வெளி பயணம்; பூமிக்கு திரும்பிய ஜப்பான் விண்கலம்!

பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோமீட்டர் அப்பால் சென்று கொண்டிருக்கும் விண்கல்லில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது ஜப்பான் விண்கலம்

சூரியனை பூமி சுற்று வருவதை போலவே பல பெரிய விண்கற்களும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும் விண்கற்களில் பூமிக்கு மிக அருகே ரியுகு சென்ற விண்கல் தாண்டி சென்றது. சூரிய குடும்பத்தை தாண்டி சென்று வரும் அந்த விண்கல் மூலமாக விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பதால் ரியுகுவை பின் தொடர்ந்து சென்று அதிலிருந்து ஆய்வுக்கு கற்களை எடுத்து வர ஜப்பான் ஹயாபுஸா என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

கடந்த 2014ம் ஆண்டு புறப்பட்ட ஹயாபுஸா விண்கலம் வெற்றிகரமாக 30 கோடி கிலோமீட்டர் பயணித்து விண்கல் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு 6 ஆண்டுகள் கழித்து பூமி திரும்பியுள்ளது. இந்த விண்கலம் இன்று ஆஸ்திரேலியாவில் வந்து இறங்கியது. இதன்மூலம் விண்வெளி ஆராய்சியில் மேலும் சில மாற்றங்கள் உருவாகும் என நம்பப்படுகிறது.