செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (10:31 IST)

உக்ரைன் குழந்தைகளுக்காக விருதை விற்ற ரஷ்யர்! – பாராட்டும் மக்கள்!

Dmitry Muratov
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் குழந்தைகள் நலனுக்காக ரஷ்யாவை சேர்ந்த நபர் தனது நோபல் பரிசை ஏலத்தில் விற்றுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல மாதங்களாக நடந்து வரும் போரினால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். இந்த போரினால் உக்ரைனை சேர்ந்த பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தனக்கு வழங்கப்பட்ட நோபல் விருதை விற்றுள்ளார் ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரத்தோவ். கடந்த ஆண்டு டிமிட்ரிக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டது. தற்போது இந்த விருதை அவர் ரூ.806 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அவரது மனிதநேய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.