அறிவிக்கப்பட்டது அமைதிக்கான நோபல் பரிசு! – இருவருக்கு பகிர்ந்தளிப்பு!
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அமைதிகான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஆண்டுதோறும் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்பை தரும் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் அல்லாமல் இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு துறைகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்காக மரியா ரெஸ்ஸோ, திமித்ரி முரடோவ் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.