புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:36 IST)

இந்தியாவுக்கு ஆக்சிஜன் ,வெண்டிலேட்டர்கள், ரெம்டிவிசர் வழங்க தயார்: ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியாவில்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 24 மணி நேரத்தில் 3.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக உலகின் பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்தவகையில் இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர், மற்றும் ரெம்டிவிசர் மருந்து உள்பட அனைத்து வகை உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இவை அனைத்தும் இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது 
 
4 லட்சம் ரெம்டிவிசர் மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்ப தயார் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த மருந்து அமெரிக்காவில் காப்புரிமை செய்யப்பட்டு இருப்பதால் இந்தியாவுக்கு அனுப்ப முடியாத சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சட்ட சிக்கலை தீர்க்க அமெரிக்கா முன் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே அமெரிக்கா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது