செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (11:24 IST)

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் சாலை விபத்தில் பலி: மணமகன் படுகாயம்!

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமகள் மற்றும் மணமகன் காரில் சென்ற நிலையில் அந்த கார் விபத்துக்குள்ளாகி மணமகள் சம்பவ இடத்திலேயே பலியானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா என்ற மாகாணத்தில் திருமணம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் மணப்பெண் மற்றும் மணமகள் கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனம் மணமக்கள் சென்ற வாகனத்துடன் மோதியதை அடுத்து தம்பதியர் இருவரும் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர் 
 
இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் பலியானார் என்றும் மணமகனுக்கு படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
25 வயது இளம்பெண் ஒருவர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி வந்த நிலையில் அந்த கார் மணமக்களின் வாகனத்தில் மோதியதால் தான் இந்த விபத்து நடந்தது என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Edited by Mahendran