வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 மே 2023 (19:56 IST)

11 வயது சிறுமியை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்!

abuse
பீகார் மாநிலத்தில், வாங்கிய கடனுக்காக தன் 11 வயது மகளை 40 வயது நபருக்குத் தாயார் திருமணம் செய்து செய்துவைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர்   நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சிவான் என்ற மாவட்டத்தில் லட்சுமிபூர் பகுதியில் வசிப்பவர் மகேந்திர பாண்டே( 40). இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு ரூ.2 லசம் கடன் கொடுத்திருந்தார். இந்தக் கடனை அப்பெண் திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் கொடுத்த மகேந்திர பாண்டே பணத்தைத் தரும்படடி கேட்டு வந்த நிலையில், அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்றறு கடனுக்குப் பதில்  உங்களின் 11 வயது மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு அப்பெண்ணும் சம்மதம் கூறியுள்ளார். இதற்கிடையே திடீரென்று  சிறுமியின் தாயார் போலீஸில் சென்று இதுகுறித்து புகாரளித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், ‘’என் சம்மதத்தின் பேரில்தான் எனக்குத் திருமணம் நடைபெற்றது. எங்களை என் தயார் சிக்க வைத்துள்ளார்’’  என்று அவர் தெரிவித்துள்ளார்.