திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (21:52 IST)

2 வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்த உறவினர்கள்

utterpradesh
கணவன் உயிரிழந்த பின்னர் காதலனை 2 வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசிப்பவர் சுனிதா(44). இவருக்குத் திருமண வயதில் ஒரு மகள் உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தன் பெண்ணுடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் அவருக்குக் காதலுண்டானது.

கணவன் உயிரிழந்த நிலையில்,  சுனிதா தன் காதலனை 2 வது திருமணம் செய்ய  திட்டமிட்டார்.  ஆனால், இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைமீறி சுனிதா தன் காதலனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, சுனிதாவின் வீட்டிற்கு வந்த  உறவினர்கள் அவரையும்,  காதலனையும்  மரத்தில் கட்டிவைத்து தாக்கினர்.

பின்னர் அருகிலுள்ள சாக்கடைக்குள் தள்ளிவிட்டனர். பிறகு அருகிலுள்ள மக்கள் அவர்களை மீட்டனர், இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.