1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:43 IST)

பிரிட்டன் பிரதமர் தேர்தல்: முந்துகிறாரா ரிஷி சுனக்?

rishi sunak
பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வரும் முன்னாள் பிரிட்டன் நாட்டின் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பின்னடைவில் இருந்தார் 
 
தற்போது திடீர் திருப்பமாக அவர் முன்னேறி வருவதாகவும் அவர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் டிரஸ் தற்போது வரை 48 சதவீத ஆதரவு பெற்றிருப்பதாகவும்,  ரிஷி சுனக் 43 சதவீத ஆதரவை பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே வெறும் 5% மட்டுமே பின்னடைவில் இருக்கும் ரிஷி சுனக் அடுத்து வரும் நாட்களில் தனது ஆதரவை அதிகரித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது