வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (10:03 IST)

1210 கோடி சொத்துடைய பணக்கார பூனை

உலகின் பணக்கார விலங்கினம் என்ற பெயரை சௌபெட் என்ற பூனை பெற்றுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய ஆடை வரிவைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மெனியை சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் நேற்று முந்தினம் உயிரிழந்தார். இவரது மறைவு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் சௌபெட் என்ற பூனையை செல்லமாக வளர்த்து வந்தார்.
 
அந்த பூனை என்றால் இவருக்கு உயிர். எந்நேரமும் தன் பூனையுடனே சுற்றுத்திரிவார். சட்டம் சம்மதித்தால் தனது பூனையை திருமணம் செய்து கொள்வேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் மறைவிற்கு முன்னர் தனது பூனையின் பெயரில் 1210 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற்கு கார்டியன்களையும் நியமித்துவிட்டு இறந்துள்ளார்.