வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 அக்டோபர் 2024 (16:49 IST)

பெண்கள் சத்தமாக குரான் ஓதக்கூடாது: தாலிபான்கள் புதிய நிபந்தனை..!

Afghanistan
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியைப் படிக்கக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது போன்ற விதிகள் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், தற்போது பெண்கள் ஒரு குழுவாக தொழுகை நடத்தும்போது அதில் ஒரு பெண் மட்டும் சத்தமாக குர்ஆனை ஓதக்கூடாது என்றும் ஒரே மாதிரி குரலில் தான் குர்ஆனை ஓத வேண்டும் என்றும் தாலிபான் அமைச்சர் தெரிவித்துள்ளார், 
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெண்களின் குரல் பாதுகாக்கப்பட வேண்டியது என்றும், அவர்கள் குரலை வெளி ஆட்கள் மட்டுமன்றி வெளியில் உள்ள பெண்களும் கேட்கக் கூடாது என்றும் கூறிய அவர், அதனால் தான் பெண்கள் சத்தமாக குர்ஆனை ஓதக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார். 
 
தாலிபான் ஆட்சி வந்த பிறகு பள்ளிக்கு செல்வது முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கட்டுப்பாட்டுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
 
 
Edited by Mahendran