1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (23:09 IST)

ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்- சவூதி அரேபிய அரசு

HAJ YATRA
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரொனா தொற்று பரவியது.
 

இதனால், பல நாடுகள் தங்கள்  நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வர பல கட்டுப்பாடுகள் விதித்தன.

 எனவே, சவூதி அரேபிய அரசும் ஹஜ் பயணிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது

ஆனால், கொரோனா தொற்று குறைந்த நிலையில்,  ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவே  ஹஜ் பயணிகளுக்கு அனுமதித்தனர்.

இந்த  நிலையில், வெளி நாடுகளில் இருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சவூதி அரேபிய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் இம்முறை ஹஜ் பயணிகள் பல நாடுகளிலிருந்தது அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.