அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பு? – மீண்டும் களமிறங்கும் ரஜினி?
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவில் பின்வாங்கினார். பின்னர் அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் “எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் அறிவிப்பேன்” என கூறியுள்ளார். இதனால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவாரா என அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.