புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (15:42 IST)

17 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மேற்கு வாசல்; நெல்லையப்பர் கோவிலில் மக்கள் கூட்டம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து மேற்கு வாசல் திறக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு முதலாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு வாசல்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நெல்லையப்பர் கோவில் சென்றபோது மேற்கு வாசலை திறக்க பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் வடக்கு மற்றும் மேற்கு வாசல்களை திறக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று பூஜைகள் செய்யப்பட்டு வடக்கு மற்றும் மேற்கு வாசல்கள் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.