நடுவானில் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த பைலட்!!
பைலட் ஒருவர் செல்பி மோகத்தால் விமானத்தின் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் விமானி சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜும் ஆரா என்ற பகுதிக்கு விமானத்தில் பயணித்துள்ளார்.
செல்பி பிரியரான இவர் ஜன்னல் வழியாக பாதி உடல் வெளியே தெரியுமாறும், புகைப்படத்தின் பின்னணியில் துபாய் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் இப்பொழுது பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் இது உண்மையாக புகைப்படம் அல்ல எடிடிங் செய்யப்பட்டது என கூறி வருகின்றனர்.