ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:49 IST)

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த 28 வயது மருத்துவர்!

விமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த 28 வயது மருத்துவர்!

அமெரிக்காவில் விமானத்தில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


 
 
கடந்த ஜூலை 23-ஆம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் இருந்து நியூஜெர்சி சென்று கொண்டிருந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனியாக பயணித்துள்ளார்.
 
அப்போது அந்த சிறுமியின் அருகில் 28 வயதான விஜயகுமார் கிருஷ்ணப்பா என்ற இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பயணித்துள்ளார். இந்நிலையில் சிறுமி தூங்கிக்கொண்டு இருந்ததால் அந்த மருத்துவர் தனது கையை சிறுமியின் தொடையில் வைத்து தனது பாலியல் சேட்டையை ஆரம்பித்துள்ளார்.
 
அந்த மருத்துவர் தனது பாலியல் சில்மிஷத்தை தொடங்கியதும் திடுக்கிட்டு எழுந்த சிறுமி அவரது நடவடிக்கை குறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து அந்த மருத்துவர் வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சிய மருத்துவர் கிருஷ்ணப்பா வேக வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
 
ஆனால் அந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோர்களிடம் கூற, அவர்கள் விமான் நிறுவனம் மீதும் அந்த மருத்துவர் மீது புகார் அளிக்க, இந்த வழக்கு எஃப்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
அவர்கள் விசாரணை நடத்தி மருத்துவர் கிருஷ்ணப்பாவை கண்டுபிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்தனர். மேலும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள அவருக்காக வாதாட நீதிமன்றம் வக்கீல் ஒன்றை நியமித்துள்ளது.