Daily Horoscope
✕

சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கும் மக்கள்..

Written By Arun Prasath
Updated: வியாழன், 26 டிசம்பர் 2019 (09:56 IST)
அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை மக்கள் சூரிய கண்ணாடி மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர்.

வானில் அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் இன்று காலை தெரிய தொடங்கியது, சூரியனை நிலவு படிபடியாக மறைத்து பின்பு சூரியனின் நடுப்பகுதியை 93% மறைத்தது. இதனால் சூரியன் நெருப்பு வளையம் போல் தோன்றியது.

தமிழகத்தில்  கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு தெரிய ஆரம்பித்தது.

துபாயில் முதலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கிய நிலையில், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் தெரிந்தது. இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதால், மக்கள் சூரிய கண்ணாடி மூலம் கிரகணத்தை ஆர்வமுடன் காண ஆரம்பித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

கணவருடன் முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா மந்தனா.. என்ன பேசினார்கள்?

அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு.. இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ விமானம் விபத்து.. எத்தனை ராணுவ வீரர்கள் பலி?

தமிழ்நாடு உள்பட 6 மாநில கவர்னர் நியமனம்.. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதிரடி..

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

அடுத்த கட்டுரையில்
Show comments