பெண் என நினைத்து ஆண் நபரை மணம் செய்த பாதிரியார்! உகாண்டாவில் அதிர்ச்சி!
உகாண்டா நாட்டில் தான் திருமணம் செய்து கொண்ட பெண் ஒரு பெண்ணே அல்ல என்பதை இரண்டு வாரம் கழித்து அறிந்த பாதிரியார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உகாண்டாவின் தெற்கில் உள்ள காயுங்கா மாவட்டத்தை சேர்ந்த முகமது முதும்பா என்பவர் அந்த பகுதியில் இஸ்லாமிய பாதிரியாராக உள்ளார். அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஸ்வபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணமாகி இரண்டு வாரங்கள் ஆகியிருந்த நிலையில் மகமதுவின் மனைவி பக்கத்து வீடுகளில் துணிகளை திருடிக் கொண்டு சுவரேறி குதித்ததாக அக்கம் பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் நபுகீராவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் போலீஸ் நபுகீராவை சோதித்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் ஒரு பெண்ணே இல்லை. பெண் வேடமிட்டிருந்த ஆண். ரிச்சர்ட் துமுஷாபே என்னும் அந்த நபர் பெண் வேடமிட்டு திருடி வந்துள்ளார்.
இதுகுறித்து தெரிய வந்ததும் நபுகீராவை மணந்து கொண்ட முகமது அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தங்களுக்குள் உறவு நடைபெறாததால் தன்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.