1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (08:53 IST)

பசில் ராஜபக்சே தப்பி செல்ல முயற்சி: விமானநிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் ஏமாற்றம்

basil
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மகன் பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் மீண்டும் இலங்கைக்குச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொது மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருவதால் ஆட்சியில் உள்ளவர்கள் தலைமறைவாகி வருகின்றனர்
 
ஏற்கனவே மகிந்த ராஜபக்சே தலைமறைவாகியுள்ள நிலையில் தற்போது அதிபர் கோத்தபாய ராஜபக்சவும் தலைமறைவாகியுள்ளார்
 
இந்தநிலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே அவர்கள் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும் அவருடைய ஆவணங்களை சரிபார்க்க விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இலங்கையிலுள்ள கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக மீண்டும் இலங்கைக்கு பசில் ராஜபக்சவை திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன