செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (09:05 IST)

கடும் நிதி நெருக்கடி.. வாங்கிய போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்..!

Pakistan PM
பாகிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் போர் விமானங்களை விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து உதவி செய்தபோதிலும் அந்நாட்டின் நிதி மீண்டு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்களை பாகிஸ்தான் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலையில் தற்போது அந்த போர் விமானங்களை ஈராக் நாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளது. 
 
1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் போர் விமானங்களை விற்பனை செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் போர் விமானங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தில் கூட பாகிஸ்தானின் பொருளாதார மீளாது என்று அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்
 
Edited by Siva