திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (09:06 IST)

நம்ம அப்படியா பழகிருக்கோம்.. இப்படி தப்பா சொல்றீங்களே! – அமெரிக்கா மீது பாக். வருத்தம்!

பாகிஸ்தான் உலகின் ஆபத்தான நாடு என அமெரிக்க ஜனாதிபதி பேசியதற்கு பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஜோ பைடன் அதிபராக பதவி வகிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்றும், ஏனெனில் அந்த நாடு எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.


அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு பாகிஸ்தானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான கண்டணத்தை பாகிஸ்தானின் அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மனாக அளித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் “அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த கருத்து ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது தவறான புரிதலால் இந்த கருத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரிடம் இதுகுறித்து சம்மன் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இது அமெரிக்காவுடனான உறவை பாதிக்காது” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K