திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:20 IST)

ஒமிக்ரான் தொற்று: அமெரிக்க நாட்டில் முதல் உயிரிழப்பு

அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில்,  இத்தொற்றுக்கு முதல் நபர் உயிரழந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிரது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,அமெரிக்க நாட்டிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உருமாறிய ஒமிர்கா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் இன்று உயிரிழந்தார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.