தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளதாகக்கூறப்படும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்துன் கொரொனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் பரவி இருந்த நிலையில் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாகத் தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணகாணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மரபணு ஆய்வகத்திற்உ 7 பேரின் மாதிரிகள் அனுப்பி வைப்பட்டதில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் 68 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.