செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 1 நவம்பர் 2017 (11:08 IST)

அப்பாவி மக்கள் மீது டிரக் ஏற்றி தீவிரவாத தாக்குதல்; 8 பேர் பலி: நியூயார்க்கில் பரபரப்பு!!

நியூயார்கில் உலக வர்த்தக மையம் அருகே தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் பலியானதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் ரோட்டில் டிரக் ஒன்று வேகமாக வந்து பொது மக்களை இடித்து தள்ளியது. 
 
மேலும் பள்ளி பேருந்து மீதும் பயங்கரமாக மோதியது. இதனால், 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவரை வளைத்து பிடித்தனர். தற்போது அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் சைபுலோ சைபோவ் என்பதும், அவர் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்ததாக கூறி உள்ளனர்.