வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (16:20 IST)

சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்க கொலரோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியலாளர்கள் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாதவை. தற்போது சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிரிக்க தொடங்கியுள்ளனர்.
 
கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் கொலரோடோ மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியலாளர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த பிளாஸ்டிக் நாம் தற்போது தினமும் பயன்படுத்து பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டது. ஆனால் அதிக உறுதியும், வளையும் தன்மையும் கொண்டது. வெப்பத்தை தாங்க கூடிய இந்த பிளாஸ்டிக்கை பல முறை பயன்படுத்தலாம்.
 
புதிய வகை பிளாஸ்டிக்கில் பாலிமர் கலக்கப்பட்டுள்ளது. அதனால் அதை சாதாரண மறு சுழற்சி மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய முடியும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பற்றாக் குறை தீரும்.