1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (12:51 IST)

ஏப்ரல் 14 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை; சேலம் கலெக்டர் அதிரடி

ஏற்காட்டில் வரும் 14 ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என சேலம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட கலெக்டர் 14ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யவோ, பயன்படுத்துவதோ கூடாது என தெரிவித்தார்.
இதனைமீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். பிளாஸ்டிக்கை ஒழிப்பதன் மூலம் தூய்மையான ஏற்காட்டினை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.