வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (11:39 IST)

38 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்.. பூமியை நெருங்கும் ராட்சச கல்! – தப்புமா பூமி?

ராட்சச விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயங்கரமான வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய மண்டலத்திற்குள் புதிதாக நடக்கும் விண்வெளி மாற்றங்களை நாசா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பெரிய விண்கல் ஒன்று பூமியின் திசை நோக்கி வேகமாக பயணித்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2020 கியூஎல்2 எனப்படும் இந்த ராட்சத விண்கல்லானது இரண்டு கால்பந்து மைதானங்களை ஒன்றாக சேர்த்த அளவுக் கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த விண்கல் பூமியுள்ள திசையில் மணிக்கு 38,624 கிமீ என்ற அசுர வேகத்தில் பயணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் பூமியின் வட்டப்பாதையை அது தாண்டி சென்றாலும் பூமியில் மோத வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி இந்த விண்கல் பூமியை கடந்து செல்ல உள்ளது.