1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (08:37 IST)

அம்மா பாட்டுக்கு சிரிப்பிலே மெட்டு போடும் ஐலா பாப்பா - ட்ரெண்டிங் வீடியோ!

ராஜா ராணி என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆலியா மானசா. அவரது அபாரமான நடிப்பு அனைத்து தரப்பினரையும் குறிப்பாக குடும்பப் பெண்களை மிகவும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த தொடரின் ஹீரோவாக, ஆலியா மானசா ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக், உண்மையான ஆல்யா மானசாவின் ஜோடியாகவே மாறினார். ஆம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பதும், இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் தனது குழந்தையுடன் அதிக நேரங்களை செலவிட்டு வரும் ஆலியா மானசா-சஞ்சீவ் கார்த்திக் தம்பதிகள் அவ்வப்போது குழந்தையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்ப்போது ஆல்யா மகளை கொஞ்சி பாட்டு பாட அதற்கு ஏற்றவாறு மகள் ஐலா சிரித்து ஆட்டம் போடுகிறார். இந்த சூப்பர் கியூட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சஞ்சீவ் "My life my world my everything"  என்று கேப்ஷன் கொடுத்து வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My life my world my everything