நிலவை தோண்ட போறோம்! யாரெல்லாம் வறீங்க? – நாசா அழைப்பு!
நிலவில் உள்ள கனிம வளங்களை தோண்டி சேகரிக்க தனியார் நிறுவனங்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
பூமியிலிருந்து சில லட்சம் கிமீ தொலைவில் உள்ள நிலவிற்கு செல்வது உலக நாடுகள் பலவற்றின் கனவாக இருந்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பல நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நிலவில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்வதில் வல்லரசு நாடுகளிடையே போட்டி எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நிலவு பயணத்திற்கும் அங்குள்ள கனிமங்களை கொண்டு வந்து நாசாவுக்கு அளிப்பதற்கும் ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்மூலம் நிலவில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்ள முயல்வதாக கூறப்படும் நிலையில் 2024ம் ஆண்டிற்குள் நாசா மூலமாக ஆண், பெண் இருவரை நிலவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டு வருகிறது.