விமானத்தில் இளைஞர் நிர்வாணம்: அதிர்ச்சியடைந்த பயணிகள்
மலேசியாவிலிருந்து டாக்கா சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் நிர்வாணமாக பயணித்தது சக பயணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
மலேசிய விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு மலிண்டா விமானம் கடந்த சனிக்கிழமை புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணி ஒருவர், அங்கிருந்த விமான பணிப்பெண்னை கட்டி பிடித்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் பணிப்பெண் அவரை தடுக்க முயன்றார். பின்பு சக பயணிகளின் உதவியுடன் அவரை இருக்கை அணுப்பி வைத்தார்.
இதனையடுத்து இருக்கைக்கு சென்ற அந்த இளைஞர், உடைகளை கழைத்து நிர்வாணமாக அமர்ந்து கொண்டு தனது லேப்டாப்பில் உள்ள ஆபாச படத்தை பார்த்து கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் விமான ஊழியர்கள் அந்த பயணியிடம் சண்டை போட்டு உடைகளை அணிய செய்து கைகளை கட்டினர். பின்பு விமானம் டாக்காவுக்கு வந்ததும் அவனை போலீசிடம் ஒப்படைத்தனர்.