துபாயில் ரூ.1352 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி துபாயில் ரூ.1352 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பணக்காரரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவர், இந்தியா மட்டுமின்றி உலகில் முக்கிய நாடுகளில் சொத்துகளை வாங்கி வருகிறார்.
சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இவரது மகனுக்கு மிகப்பெரிய சொகுசு பங்களா ஒன்றை ரூ.664 கோடியில் வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி, தற்போது
இந்த நிலையில் இதைவிட பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்றை ரூ.1352 கோடியில் வாங்கியுள்ளார்.
இந்தப் பங்களா குவைத் நாட்டைச் சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவர் முகமது அல்ஷாயாவிடம் இருந்து அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பங்களாவில், 10 படுக்கை அறைகளும், ஸ்பா, நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் அமைந்துள்ளனர்.
உலகில் அதிக மதிப்புள்ள வீடுகளில் முகேஷின் மும்பை –அன்டில்லா வீட்டு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj