திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (05:51 IST)

பேஷன் ஷோ மாடல் அழகியின் உடையில் பிடித்த தீ: பரபரப்பு சம்பவம்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பேஷன் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்வதில் இளம்பெண்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அமெரிக்காவில் உள்ள சால்வடோர் நாட்டில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவின் போது திடீரென மாடல் அழகி ஒருவரின் உடையில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வண்ண வண்ண விளக்குகளுக்கு இடையே ஒரு மாடல் அழகி வெறும் இறகுகளால் ஆன ஆடையை அணிந்து ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது அவருடைய உடையின் ஒரு பகுதி அங்கு எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு ஒன்றில் பட்டது. இதனால் அவர் அணிந்திருந்த உடை திடீரென தீப்பிடித்தது

இதனை கண்டதும் அந்த மாடல் அழகி அலறினார். உடனே சுதாரித்து கொண்ட அங்கிருந்த நிர்வாகிகள் மாடல் அழகியின் உடையில் இருந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.