தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 60 ரூபாயும் ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை இன்னும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் தங்கம் வாங்க முடிவு செய்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூபாய் 7,090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 குறைந்து ரூபாய் 56,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,740 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva